கணவரை கொன்றவர், தன்னையும் மிரட்டி வருவதாக ஆங்கிலோ இந்திய பெண் புகார்!

நட்பாக பழகியவர் தனது கணவரை கொன்றதோடு தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக ஆங்கிலோ இந்திய பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 | 

கணவரை கொன்றவர், தன்னையும் மிரட்டி வருவதாக ஆங்கிலோ இந்திய பெண் புகார்!

நட்பாக பழகியவர் தனது கணவரை கொன்றதோடு தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாக ஆங்கிலோ இந்திய பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மார்லின் டாக்கெட்(50). இவர் சிறுவள்ளூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது கணவரான பிரடெரிக் க்ளைவ் பேட்ரிக் டாக்கெட், சௌதி அரேபியாவில் எண்ணெய் கிடங்கில் பணியாற்றி வந்தார். இவர்கள் வீட்டின் கீழே உள்ள குடியிருப்பில் வசித்த ஆல்வினா நகோத்தி(28) என்ற பெண் டாக்கெட் குடும்பத்தினருடன் நட்பு ரீதியில் பழகி வந்ததாகவும் பின் பிரடெரிக்குடன் தகாத உறவில் ஈடுபட்டு, அவரிடம் இருந்து சுமார் 83 லட்சம் வரையில் பணத்தை ஏமாற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரடெரிக் டாக்கெட் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்.5 ஆம் தேதி மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து மார்லின் டாக்கெட் தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை ஆல்வினா நக்கோத்தி தான் பணத்திற்காக கொன்றுவிட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால், காவல்துறையினரின் விசாரணையில் அதிருப்தி அடைந்த மார்லின், வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தால் சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த மார்லின் டாக்கெட், தன்னையும் தன் குடும்பத்தினரையும் ஆல்வினா நக்கோத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி வருவதாகவும், தங்கள் குடும்பத்தினரை அவரிடம் இருந்து பாதுகாக்கும்படியும் புகார் அளித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP