மணிமுத்தாறு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அருவியில் தண்ணீர் சீரான பிறகே அனுமதியளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
 | 

மணிமுத்தாறு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில், எப்போது தண்ணீர் கொட்டும் என்பதால் இங்கு எப்போதுமே சுற்றுலாப்பணிகளை காணமுடியும். அருவியில் கொட்டும் தண்ணீர் மூலிமை தன்மை வாய்ந்ததாக கருதப்படுவதால், இந்த அருவிக்கு வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாபயணிகள் வருவதுண்டு.

இந்நிலையில், மணிமுத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 2 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அருவிக்கு வரும் நீரின் அளவு அதிகாரித்து வருவதால், இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP