பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கவனிக்க யாரும் இல்லாததால் மனமுடைந்த வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

வந்தவாசி அருகே உள்ள கீழ் கொடுங்காலூரில் அரசுக்கு சொந்தமான காரிய மண்டபத்தில், வயதான தம்பதி அப்பாவு (90), அலமேலு (85) தங்கி வந்துள்ளனர். இவர்களுக்கு 4 ஆண், 3 பெண் என 7 பிள்ளைகள் உண்டு. சொத்து தகராறு ஏற்பட்டதையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்துகளை 7 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துள்ளனர்.

ஆனால், ஒரு பிள்ளைகள் கூட பெற்றோரை கவனிக்காததால், அரசுக்கு சொந்தமான காரிய மண்டபத்தில் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், 7 பிள்ளைகள் இருந்தும் ஒருவர் கூட கவனிக்கவில்லையே என மனமுடைந்த இருவரும் இன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். பெற்றோர்கள் அனாதைகளாக விடப்பட்டதோடு, மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு பிள்ளைகள் நடந்து கொண்டது அப்பகுதியினரிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP