அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து!

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் இன்றைய சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.
 | 

அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து!

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிகட்ட அறிவிப்பை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று அறிவிப்பார் என தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை 10.45 மணியளவில் அவர் சென்னை வருவதாக இருந்தது. 

இந்நிலையில், அமித் ஷாவின் இன்றைய சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து அவர் டெல்லி புறப்பட்டு சென்றாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், பாமகவுடன் அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து, சென்னையில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP