குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் சுற்றுப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 | 

குற்றால அருவியில் குளிக்க அனுமதி!

குற்றால அருவிகளில் சுற்றுப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.  

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவதுண்டு. கடந்த மாதம் குற்றால சீசன் தொடங்கிய நிலையில், அருவியில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் விழுந்தது. இதை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியதால் அருவியில் தண்ணீர் வரத்து சீரானது. 

கடந்த சில நாட்களாக நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று வார விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP