Logo

எய்ட்ஸ் விழிப்புணர்வு: வித்தியாசமான உடையில் சமூக ஆர்வலர்!

கோவையில் எய்ட்ஸ் குறித்த வாசகங்களை வரைந்த கருப்பு உடையை அணிந்து, சமூக ஆர்வலர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
 | 

எய்ட்ஸ் விழிப்புணர்வு: வித்தியாசமான உடையில் சமூக ஆர்வலர்!

கோவையில் எய்ட்ஸ் குறித்த வாசகங்களை வரைந்த கருப்பு உடையை அணிந்து, சமூக ஆர்வலர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருத்து “சமூக பங்களிப்பின் மூலம் எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல்” ஆகும். 

இந்த நிலையில், கோவையில், உலக எய்ட்ஸ் தினத்தில், எய்ட்ஸ் நோய் குறித்து  மக்களிடம் விழிப்புணர்போடு கூடிய எச்சரிக்கையை ஏற்படுத்தும், வாசகங்கள் வரைந்த உடையை அணிந்து, ஆட்சியர் அலுவலகம் அருகே, சமூக ஆர்வலர் ராஜா சேது முரளி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதுதொடர்பாக ராஜா சேது முரளி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை புறக்கணிக்காமல், அவர்களை  அரவணைக்க வேண்டும். அவரை தொடுவதால் எய்ட்ஸ் நோய் பரவாது . எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை கடித்த கொசு , நம்மை கடித்தால் நோய் தொற்று ஏற்படாது எனவும், அவர்களிடம் பேசினாலோ , பழகினாலோ, சாப்பிட்டாலோ  எய்ட்ஸ் நோய் பரவாது என்றார்.

பெற்றோர்களுக்கு எய்ட்ஸ் நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வராமல் தடுக்க மருந்துகள் இருப்பதாக கூறினார். எய்ட்ஸ் இல்லாத தேசத்தை உண்டாக்க கடந்த 20 வருடங்களாக எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு  எடுத்த நடவடிக்கை காரணமாக, இந்தியாவில் தற்போது எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படாமல், தடுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அதிக வருடங்கள் வாழ, அரசால் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP