அதிமுக - தேமுதிக கூட்டணி தெய்வத்தாலும் மக்களாலும் உருவான கூட்டணி: விஜயபிரபாகரன்

அதிமுக - தேமுதிக கூட்டணி தெய்வத்தாலும், மக்களாலும் உருவான கூட்டணி என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுக - தேமுதிக கூட்டணி தெய்வத்தாலும் மக்களாலும் உருவான கூட்டணி: விஜயபிரபாகரன்

அதிமுக - தேமுதிக கூட்டணி தெய்வத்தாலும், மக்களாலும் உருவான கூட்டணி என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 

திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்த கொட்டப்பட்டியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டாக்டர்.இளங்கோவனை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய விஜயபிரபாகரன், அதிமுக- தேமுதிக கூட்டணி தெய்வத்தாலும், மக்களாலும் உருவான கூட்டணி என்றும், எல்லா தலைவர்களும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்பும் கூட்டணி என்றும் தெரிவித்தார். 

மத்தியிலும், மாநிலத்திலும் நமது கூட்டணி ஆட்சி இருந்தால் தான் நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்ய முடியும். இரண்டு பக்கமும் தட்டினால் தான் ஓசை, ஒரு பக்கம் தட்டினால் ஓசை இருக்காது. அது போல தான் டெல்லியிலும், தமிழ்நாட்டிலும் சேர்ந்து தட்டினால் தான் நம் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.

நதிகளை இணைக்க வேண்டும் என்பதையே தேமுதிகவின் முதல் கோரிக்கையாக வைத்துள்ளோம். இந்த கோரிக்கை முதல் கோரிக்கையாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். இதே போல் இந்த கூட்டணி விவசாயத்தை மேம்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக விஜயபிரபாகரன் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP