வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்து அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்.. திமுக வெற்றி

வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்து அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்.. திமுக வெற்றி
 | 

வாக்கு எண்ணும் மையத்தில் புகுந்து அதிமுக எம்எல்ஏ வாக்குவாதம்.. திமுக வெற்றி

சேலம் மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடந்தது. 7-வது வார்டுக்கு தி.மு.க. வேட்பாளராக புஷ்பராணியும், அதிமுக வேட்பாளராக ராஜலட்சுமியும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது 2 பேரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஒரு கட்டத்தில் திமுகவே முன்னிலையில் இருந்ததால் வெற்றி அறிவிப்பு வரும் என அக்கட்சியினர் காத்திருந்தனர். இச்சூழலில், காலை 7.15 மணிக்கு ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சித்ரா திடீரென வாக்கு எண்ணும் மையத்துக்குள் புகுந்தார். பின்னர், அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரிடம் சில அதிகாரிகள் ஏன் உள்ளே வந்தீர்கள் என கேள்வி எழுப்பியப்போது அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

பின்னர், அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி தரப்பில், ஏற்காடு டவுன், தலைச்சோலை பஞ்சாயத்தில் உள்ள குறிப்பிட்ட 2 வார்டின் வாக்குகளையும், செல்லாத வாக்குகள் என பிரித்து தனியாக எடுத்து வைக்கப்பட்ட 1,784 வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த மனு கொடுக்கப்பட்டது. இதை ஏற்ற தேர்தல் அதிகாரிகள், காலை 10 மணிக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்தினர். அதன்பின், மாலை வரையும் முடிவு அறிவிக்கப்படவில்லை. நீண்ட இழுபறிக்கு பின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 2ஆவது நாளின் இரவில் தி.மு.க. வேட்பாளர் புஷ்பராணி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP