பாஜகவின் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் முதல்வர்: கே.பாலகிருஷ்ணன்

எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதையும் மீறி அரசு நிலம் கையகப்படுத்த முயற்சிப்பது விவசாயிகளை அழிப்பதற்கான செயலாகவே பார்க்கப்படுகிறது என சிபிஎம் மாநில செயலளார் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

பாஜகவின் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் முதல்வர்: கே.பாலகிருஷ்ணன்

பாஜகவின் கைப்பிள்ளையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எட்டு வழி சாலை அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அதையும் மீறி அரசு நிலம் கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல் வெளியாகி வருகிறது. இது விவசாயிகளை அழிப்பதற்கான செயலாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவின் கைப்பிள்ளையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் செயல்பட்டு வருகின்றனர். மேகதாதுவில் கட்டப்படும் அணையால் தமிழகத்துக்கு நலன் இருப்பது போல் கர்நாடக அரசு நாடகமாடி வருகிறது. மேகதாது அணை விவகாரத்தில் கட்சி வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP