மாணவர்களால் உருவாக்கப்பட்ட குப்பைகளை உறிஞ்சும் இயந்திரம்!

தெருக்களில் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை ( டிரக் மவுன்ட் ஸ்ட்ரீட் வாக்கும் கிளினர்) வடிவமைத்து என்.ஐ டி. மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
 | 

மாணவர்களால் உருவாக்கப்பட்ட குப்பைகளை உறிஞ்சும் இயந்திரம்!

தெருக்களில் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை ( டிரக் மவுன்ட் ஸ்ட்ரீட் வாக்கும் கிளினர்) வடிவமைத்து 
என்.ஐ டி. மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

திருச்சி என்.ஐ.டி யில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதன் வளாகத்தில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு கிளப் என்ற அமைப்பை உருவாக்கி சில கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  இந்த அமைப்பை சார்ந்த மாணவர்கள்  1983-ல் தங்கள் படிப்பை முடித்த முன்னால் மாணவர்களுடன் இணைந்து சாலையோர குப்பையை  அகற்றும் கருவியை வடிவமைத்து, திருச்சி மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளனர்.

மாணவர்களால் உருவாக்கப்பட்ட குப்பைகளை உறிஞ்சும் இயந்திரம்!

இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்கு முன், இதன் தேவைகளையும் சவால்களையும்  அறிந்து கொள்ள அந்த அமைப்பின் மாணவர்கள் சென்னை மாநகராட்சி சென்று ,அங்கு  இருக்கும் குப்பை அகற்றும் இயந்திரத்தை பார்வையிட்டனர்.பிறகு என்.ஐ.டி யின்  முதல்வர் மினிஷாஜி  தாமஸ், திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள்  என அனைவரின் வழிகாட்டலால் அந்த மாணவர்கள் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டு, இந்த இயந்திரத்தை குறைந்த விலையில் வடிவமைத்தனர்.

அக்குழுவினர் ஒராண்டுகாலத்துக்குள், குப்பை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்தனர். ஒரு லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை மாநகராட்சிக்கு, மாணவர்கள் வழங்கினர். வாக்கம் கிளீனர் பாணியில் உள்ள குழாய்கள் வாயிலாக குப்பைகள் உறிஞ்சப்பட்டு அகற்றப்படுகிறது. இந்த இயந்திரத்தைக் கொண்டு காய்ந்த இலை இலைகள் பலவகை நெகிழிகள் மற்றும் இதர குப்பைகளை அகற்ற இயலும். ஒரு குட்டி யானை வாகனத்தில் 3 டிரம்கள் வைத்து ஒருவர் இயக்கினால் ஒரு நிமிடத்திற்கு 550 கன அடி குப்பைகளை அகற்றலாம்.

மாணவர்களால் உருவாக்கப்பட்ட குப்பைகளை உறிஞ்சும் இயந்திரம்!

தற்போது ஒரு லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரமானது அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் போது அதன் உற்பத்தி செலவு 50 ஆயிரமாக குறையும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும்  இதனை பயன்படுத்தி பரிசோதித்த மாநகராட்சியினர் இந்த இயந்திரம் தற்போது உள்ள சூழலுக்கு தேவையானது. அடுத்த கட்டமாக இதன் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP