சின்னதம்பி குறித்த அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

காட்டு யானை சின்னத்தம்பியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், அதனை பற்றி அறிக்கை வரும் திங்கள் அன்று சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை வளாகத்தில் கடந்த ஏழு நாள்களாக முகாமிட்டிருந்த சின்னத்தம்பி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த யானை வியாழக்கிழமை அதிகாலை ஆலை வளாகத்தை விட்டு வெளியேறியது. அதையடுத்து, வனப்பகுதியில் இருந்து 30 கி.மீ தூரமும், ஆலையில் இருந்து 3 கி.மீ தூரமுள்ள, விவசாயி ஒருவரின் கரும்புத் தோட்டத்துக்குள் தஞ்சம் அடைந்தது. 

இதனிடையே, சின்னத்தம்பியை அங்கிருந்து அப்புறப்படுத்தப் பொள்ளாச்சியில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபவம் வாய்ந்த கும்கி கலீம் மற்றும் மாரியப்பன் ஆகிய யானைகளுடன் சின்னத்தம்பி விளையாடி வந்தது. 

இந்நிலையில், சின்னத்தம்பி யானை விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதாகவும், கிராமங்களில் சுற்றி வருவதால் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் கூறி, நேற்று காலை தேசிய நெடுஞ்சாலையில் ஆலை தொழிலாளர்களும், விவசாயி மற்றும் பொதுமக்களும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம், "சின்னத்தம்பி யானையின் நிலை குறித்து வரும் தமிழக வனத்துறை வரும் திங்கட்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP