திருச்சி நவல்பட்டு அருகே மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் நினைவாக திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே நடந்த மினி மராத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 | 

திருச்சி நவல்பட்டு அருகே மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் நினைவாக திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே நடந்த மினி மராத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

1951ஆம் ஆண்டு இந்தோ திபெத்  எல்லையில் நடைபெற்ற போரின் போது இந்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர் . அவர்களது நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் இந்த ஆண்டு  பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல் துறையினரின் நினைவை போற்றும் வகையில் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி மாத்தூர் ரவுண்டானாவில் நடைபெற்றது. 
ஆண்களுக்கான போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆண்கள் பிரிவுக்கு மாத்தூர் ரவுண்டானாவில் தொடங்கி அண்ணாநகர், 100 அடி சாலை வழியாக குண்டூர் அய்யனார் கோவில் வரை 10 கி.மீ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதேபோல் பெண்களுக்கு ஓ.எப்.டி அண்ணாநகரில் தொடங்கி 100 அடி சாலை வழியாக குண்டூர் அய்யனார் கோவில் வரை 7 கி.மீ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட 10 கி.மீ தூரத்தை 41 நிமிடத்தில் அடைந்து ஆண்கள் விளையாட்டு விடுதியை சேர்ந்த வாசன் முதலாம் இடத்தையும், பள்ளி மாணவர்கள் மணிகண்டன் 2ம் இடத்தையும், முருகேசன்  3ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

இதேபோல் பெண்கள் பிரிவில் 7 கி.மீ தூரத்தை 30 நிமிடத்தில்  அடைந்து காவலர் தங்கமலர் முதலாம் இடத்தை பிடித்தார், இதனை தொடர்ந்து காவலர் வள்ளிநாயகி 2ம் இடத்தையும், பள்ளி மாணவி பூஜா 3ம் இடத்தையும் பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 21ம் தேதி நடைபெறும் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் நினைவை போற்றும் விழாவில் காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட காவல்துறையினர்  தெரிவித்தனர்.

இன்று நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், இருபால் காவலர்கள், பொதுமக்கள் உட்பட்ட 400 பேர் கலந்துகொண்டனர்.

newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP