காதலன் எதிரிலேயே ரயில் முன் பாய்ந்த மாணவி! திருமணத்திற்கு மறுத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி!!

காதலனுடன் சண்டை.. அங்கே வந்த ரயிலில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை..
 | 

காதலன் எதிரிலேயே ரயில் முன் பாய்ந்த மாணவி! திருமணத்திற்கு மறுத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கொண்டசாமி நகரை சேர்ந்தவர் கவுசிகாதேவி. கல்லூரி மாணவியான  இவரும், அங்கு தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் ரமேசுக்கும் காதலித்து வந்தனர். இருவரும் பல இடங்களுக்கு சென்று  உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

மாணவியைக் கல்யாணம் செய்துக் கொள்வதற்கு ரமேஷ்  காலதாமதம் செய்து பல காரணங்களைத் தொடர்ந்து கூறி வந்ததாக ட் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் சந்தித்து பேசாமல் இருந்தனர். இந்த நிலையில் ரமேஷ், கவுசிகாதேவிக்கு போன் செய்து உன்னுடன் பேச வேண்டும் வா என்றார். இதையடுத்து கவுசிகா தேவி அவரை சந்திப்பதற்காக சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே இருவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.

காதலன் எதிரிலேயே ரயில் முன் பாய்ந்த மாணவி! திருமணத்திற்கு மறுத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி!!

அப்போது திடீரென அவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றவே மனம் உடைந்த கவுசிகா தேவி அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். பின்னர் அந்த வழியாக இரவு 8 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கவுசிகாதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுசிகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP