Logo

விவசாயிகள் பெயரில் மோசடி செய்த நிறுவனம்; போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி வங்கிகளில் 300 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகள் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள ஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கும்பகோணம் அடுத்த பாபநாசத்தில் ஸ்டேட் வங்கி முன்பு கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 | 

கும்பகோணத்தில் 'ஆரூரான்' சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் விவசாயிகள் பயிரிட்ட கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்து அதற்கான தொகையை ஓரிரு மாதங்களில் வழங்க வேண்டும் என்பது விதி. 

இந்த நிலையில் 2015 மற்றும் 16 ஆம் ஆண்டு விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு இதுவரை முழுமையான தொகை வழங்காமல் பல கோடிக்கணக்கில் நிலுவை வைத்துள்ளது. இதற்கிடையில் விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்கள் பெயரில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ஆரூரான் சர்க்கரை ஆலை கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. 

இதனைக் கண்டித்து கும்பகோணம் அடுத்த பாபநாசத்தில் ஸ்டேட் வங்கி முன்பு பல நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கைகளில் கருப்புக்கொடி ஏந்தியும், கரும்புகளை ஏந்தியும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கண்டன முழக்கம் இட்டனர். நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு பல ஆயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி பெருமளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP