Logo

பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து சாதனை!

பிறந்து 27 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
 | 

பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து சாதனை!

பிறந்து 27 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இளங்கோவன் கௌரி தம்பதியினரின் ஒரே குழந்தை மேகஸ்ரீ. குழந்தை பிறந்து
சில நாட்களில் இருந்து குழந்தைக்கு மூச்சு விடுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  பெற்றோர்கள் குழந்தைக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாக நினைத்து அதற்கான வைத்தியங்களை செய்யத் துவங்கினார்.

ஆனால் குழந்தையின் நிலைமை மிகவும் மோசமான சூழ்நிலைக்கு செல்லவே திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற இளங்கோவன், கௌரி தம்பதியினர் தயாராகினர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேய குழந்தையின் நிலமை படுமோசமான சூழ்நிலைக்கு சென்றுள்ளது. 

பிறந்து 27 நாட்களே ஆன குழந்தைக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்து சாதனை!

இதனால், அருகில் இருந்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் இடது பக்க நுரையீரல் பிறவி முதல் இயங்கவில்லை என்பதை கண்டறிந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு உடனடியாக நுரையீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

பெற்றோர்கள் சம்மதத்தின் பேரில் 7 பேர் கொண்ட மருத்துவ குழு, பிறந்து 27 நாட்களே ஆன ஒன்றரை கிலோ எடை கொண்ட குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து இடதுபுற நுரையீரலின் மேல் பகுதியை அகற்றி இயற்கையான முறையில் சுவாசம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்தனர். மேலும், வலது புறம் நுரையீரலின் கீழ்பகுதியில் நீர் தொற்று ஏற்பட்டிருந்ததால், சிறிய குழாய்கள் அமைத்து அதில் இருந்த நீரை அகற்றியுள்ளனர். 

சிக்கலான அதே நேரத்தில் மிகவும் சவாலான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP