மதுரையில் 80 சவரன் கொள்ளை! கதறி துடித்த பாங்க் மேனேஜர்!

நோட்டமிட்டு வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணக்கட்டுகளை அள்ளிச்சென்ற கும்பல்!
 | 

மதுரையில் 80 சவரன் கொள்ளை! கதறி துடித்த பாங்க் மேனேஜர்!

மதுரையில் வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர். 

மதுரை அழகிரி நகர்  எப்போதும் ஆள்நடமாட்டத்துடன் காணப்படும் பகுதி. இதனை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிகிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிப்பது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி வங்கி மேலாளர் ஒருவர் சென்னையில் வசித்து வரும் தனது மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்ற நிலையில் இதனை நோட்டமிட்ட அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 80 சவரன் கொள்ளை! கதறி துடித்த பாங்க் மேனேஜர்!

இவரது மகளுக்கு கடந்த 28ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்பத்துடன் தனசேகரன் சென்னைக்கு சென்றுள்ளார். வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 80 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தனசேகரன் அளித்த புகாரின் படி சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பாங்க் மேனேஜர் தனசேகரன் செய்வதறியாது சோகத்துடன் புலம்பியது பார்ப்பவர்களின் மனதைக் கரையச் செய்தது!
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP