ரூ.7.5 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்கள் பறிமுதல்!

திருச்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

ரூ.7.5 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்கள் பறிமுதல்!

திருச்சியில் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி பழைய பால்பண்ணை அருகே திருச்சி கிழக்கு வட்டாச்சியர் ரேணுகா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஓசூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து சோதனையிட்டனர்.

அப்போது, அந்த லாரியில் 50 மூட்டைகளில் ரூ.7.5 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.  

ரூ.7.5 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்கள் பறிமுதல்!

இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தனர். மேலும் லாரி ஓட்டுநர் காளிதாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP