6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியல் !!

கோவையில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
 | 

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியல் !!

கோவையில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்டது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 

கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, காணாமல் போனார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அருகில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

இதனிடையே நேற்று காலையில், கஸ்தூரிநாயக்கன் புதூர் பகுதியில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  

இந்நிலையில், சிறுமியின் உடல்கூறு பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி துடியலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP