6 மாத இலவச ஏ.சி., ஃபிரிட்ஸ் சர்வீஸ் பயிற்சி: அண்ணா பல்கலை., அறிவிப்பு

தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம் ஏ.சி., ஃபிரிட்ஜ் சர்வீஸ் தொழில் பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 | 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தென் சென்னை ரோட்டரி கிளஃப் ஆகியவை சார்பில் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் மூலம்  6 மாத ஏ.சி., ஃபிரிட்ஜ் சர்வீஸ் தொழில் கல்வி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெறும். இதில் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நவ.2019 முதல் ஏப்ரல் 2020 வரை நடக்கும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க நேர்முகத் தேர்வு அடிப்படையில் 60 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், CPDE கட்டிடம், அண்ணா பல்கலை என்ற முகவரியை அணுகுமாறு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP