மான் கறி சமைத்து உண்ட 6 பேர் கைது!

மேட்டுப்பாளையம் வனச்சரக எல்லையில் மான் கறி சமைத்து சாப்பிட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 | 

மான் கறி சமைத்து உண்ட 6 பேர் கைது!

மேட்டுப்பாளையம் வனச்சரக எல்லையில் மான் கறி சமைத்து சாப்பிட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம்,  சுண்டப்பட்டி பிரிவுக்குட்பட்ட   கண்டியூர் காப்புக் காட்டில் நேற்று முன்தினம் மாலை ஒரு புள்ளிமான் நாய்களால் கொன்று, கடித்துக்கொண்டிருந்தது. அதைக் கண்ட கெம்மாரம்பாளையம் கிராமம், மாந்தரைக்காடு பகுதியைச் சேர்ந்த இராமசாமி(55 ) என்பவர் நாய்களை விரட்டிவிட்டு, புள்ளிமான் கறியை எடுத்துவந்துள்ளார்.

பின்னர், ராமசாமி தனது அக்காள் மகன் ரகு மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து, மான்கறி சமைத்து மதுவுடன் சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து வந்த மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சு.செல்வராஜ், சுண்டப்பட்டி பிரிவு வனவர் முத்துகிருஷ்ணமூர்த்தி, கண்டியூர் பீட் வனக்காப்பாளர் கல்யாணசுந்தரம், சுண்டப்பட்டி பீட் வனக்காப்பாளர் தினகரன், வனக்காவலர் நாகராஜ் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

அதில் 2 பேர் மட்டுமே பிடிபட்டனர். மற்ற 4 நபர்கள் தப்பியோடினர். இந்நிலையில் வனத்துறையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், தப்பியோடிய 4 பேரும் நேற்று பிடிபட்டனர். இதையடுத்து 6 பேர் மீதும் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, தலா ரூ.10,000 வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

newstm.in.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP