சாலையில் கிடந்த 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள்!

சென்னை தரமணி அருகே சாலையில் கிடந்த 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

சாலையில் கிடந்த 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள்!

சென்னை  தரமணி அருகே சாலையில் கிடந்த 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை தரமணி அருகே சாலை ஓரத்தில் கட்டுக்காட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கிடந்துள்ளன. அவ்வழியாக சென்ற ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இதை கண்டு எடுத்து பார்த்தபோது, அவை கள்ள நோட்டுக்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.89,500 மதிப்புடைய 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த கள்ள நோட்டுகளை யார் சாலையில் வீசி சென்றது என சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP