Logo

50 லட்சம் நகைகள் கொள்ளை! கொள்ளையர்களைப் பார்த்தும் துரத்த முடியாததால் நிம்மதியாக தூங்கிய காவலாளி!

சேலத்தில் பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில், பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, 1.50 கிலோ பிளாட்டினம், வைரம், தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற கொள்ளை கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 | 

50 லட்சம் நகைகள் கொள்ளை! கொள்ளையர்களைப் பார்த்தும்  துரத்த முடியாததால் நிம்மதியாக தூங்கிய காவலாளி!

பிரபல நகைக்கடை அதிபர் வீட்டில், பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து 1.50 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஓமலூர் பிரதான சாலையில் குரங்குசாவடி பகுதியில் ஏஎன்எஸ் திவ்யம் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் ஸ்ரீபாஷ்யம். நகைக்கடை அருகிலேயே சொந்தமாக வீடு கட்டி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த அனைவரும் மாடியில் உள்ள அறையில் படுத்து தூங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலையில், வீட்டுக்குள் இருந்து மர்ம நபர்கள் இருவர், சுற்றுச் சுவரை தாண்டிக் குதித்து வெளியே வந்தனர். அவர்கள் கையில் சின்னதாக இரண்டு மூட்டைகள் வைத்திருந்தனர். இதை பார்த்த வாயில் அருகே இருந்த இரவுக் காவலாளி தங்கவேல், அவர்களை பிடிக்க முயன்றுள்ளார்.  அப்போது மர்ம நபர்கள் காவலாளியை தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். வயதான தங்கவேல் உடனடியாக வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுக்காமல் அப்படியே தூங்கியுள்ளார். 

50 லட்சம் நகைகள் கொள்ளை! கொள்ளையர்களைப் பார்த்தும்  துரத்த முடியாததால் நிம்மதியாக தூங்கிய காவலாளி!

காலை 7 மணியளவில், தூங்கி எழுந்து வந்த  ஸ்ரீபாஷ்யம், பாதுகாப்பு பெட்டகம் திறந்த நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த 1.50 கிலோ பிளாட்டினம், வைரம், தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து    ஸ்ரீபாஷ்யம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். 

கொள்ளையர்கள் அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது. மேலும், பாதுகாப்பு பெட்டகத்தின் மீது வைக்கப்பட்டிருந்த சாவியின் மூலம் பெட்டகத்தைத் திறந்து, நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.  கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.

50 லட்சம் நகைகள் கொள்ளை! கொள்ளையர்களைப் பார்த்தும்  துரத்த முடியாததால் நிம்மதியாக தூங்கிய காவலாளி!

ஸ்ரீபாஷ்யம், அன்றாடம் இரவில் தூங்கச் செல்லும் முன், மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அலாரம் அடிக்கும் வகையில் சுவிட்ச்ஆன் செய்து விட்டு படுக்கைக்குச் செல்வது வழக்கம். ஆனால், நேற்று அவ்வாறு சுவிட்ச் ஆன் செய்யாமல் தூங்கச் சென்றுள்ளார். இதனால்  கொள்ளை சம்பவத்தில் வீட்டில் உள்ள பணியாளர்களுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர். 

சிசிடிவி காட்சிகளில் பதிவாகிய காட்சிகள் மூலம் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP