அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல்.

துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு மணல் கடத்திய 5 ஓட்டுனர்களையும் போலீசார் கைது செய்தனர்.
 | 

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல்.

துவரங்குறிச்சி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 
மணல் கடத்திய 5 ஓட்டுனர்களையும் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே  திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கனிமவளத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு மதுரைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்ததை அடுத்து 5 லாரிகளையும் துவரங்குறிச்சி காவல் துறையினரிடம்  கனிம வளத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதையடுத்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து மணலுடன் 5 லாரிகளையும் பறிமுதல் செய்ததுடன் லாரிகளை ஓட்டி வந்த வள்ளான் (45), ஜெயக்குமார் (33), பாலமுருகன் (50), ராஜேஷ் (28) ஆனந்த் (27) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP