ஃபனி புயல் பாதிப்பால் 5 ரயில்கள் ரத்து!

ஃபனி புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 5 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று மட்டும் 3 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
 | 

ஃபனி புயல் பாதிப்பால் 5 ரயில்கள் ரத்து!

ஃபனி புயலால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 5 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஹவுரா - யஸ்வந்த்பூர் விரைவு ரயில் (22887), எர்ணாகுளம் - பாட்னா (22643) விரைவு ரயில், எர்ணாகுளம் - ஹவுரா விரைவு ரயில் (22878) ஆகியவை 7 -ஆம் தேதி (இன்று) ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல் - நியூ ஜல்பாய்குரி விரைவு ரயில் (22611) , சென்ட்ரல் - சந்தரகாசி விரைவு ரயில் (82814) ஆகியவை 8 -ஆம் தேதி (நாளை) ரத்து செய்யப்படுகிறது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP