கோவையில் 41 இலட்சம் பணம் மற்றும் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கோவையில் தேர்தல் பறக்கும் படையினரால் வங்கி வாகனத்திலிருந்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 41 இலட்ச ரூபாய் பணம் மற்றும் உரிமம் இல்லாத இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

  கோவையில் 41 இலட்சம் பணம் மற்றும் இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்

கோவையில் தேர்தல் பறக்கும் படையினரால், வங்கி வாகனத்திலிருந்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 41 இலட்ச ரூபாய் பணம் மற்றும் உரிமம் இல்லாத இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சாய்பாபாகாலணி பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 'பாங்க் ஆப் பாரோடா' வாகனத்தை நிறுத்தி, அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஏடிஎம் மையங்களில் நிரப்ப 41 இலட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது.

உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.  மேலும், அந்த வங்கியின் பாதுகாவலர்களான‌ சுப்பிரமணி மற்றும் திருஞானம் ஆகியோரிடம் இருந்த, உரிமம் இல்லாத இரண்டு துப்பாகிகள் மற்றும் தோட்டாக்களையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட, பணத்திற்கான ஆவணங்களை வங்கி சமர்பித்த‌தை தொடர்ந்து, பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. ஆனால், உரிமம் இல்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ஆயுதப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP