ஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

ஓடும் ரயிலில் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
 | 

ஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் பெண்கள் உள்பட 4 பேரின் உடல்கள் கிடந்தன. இதனை கண்ட சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!

இதனையடுத்து அங்க விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் திருச்சி உறையூரை சேர்ந்த உத்திராபதி, சங்கீதா, அபிநயஸ்ரீ, ஆகாஷ், ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்  ஓடும் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்டதும் முற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP