வழி தவறிய 3 வயது சிறுவன்: சமூக வலைதளம் மூலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வழிதவறிய சிறுவனை, சமூகவலைதளங்களால் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இருந்து மீட்டனர்.
 | 

வழி தவறிய 3 வயது சிறுவன்: சமூக வலைதளம் மூலம் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

மேட்டுப்பாளையத்தில் வழிதவறிய சிறுவனை, சமூகவலைதளங்களால் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இருந்து மீட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல்நிலையம் அருகே உள்ள அரோமா பேக்கரி முன்பு 3 வயது சிறுவன் வழிதெரியாமல் சுற்றிதிரிந்து கொண்டிருந்தான். இதை கண்ட சமூக ஆர்வலர் கணேசன் சிறுவனை மீட்டு, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறை அதிகாரிகள் அச்சிறுவனை விசாரித்த பொழுது, அவனால் அவனது பெற்றோர் மற்றும் ஊர் விபரங்களை சொல்லத் தெரியவில்லை.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இச்சிறுவன் இருப்பதாகவும், சிறுவனை மீட்க சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதன் மூலம் தகவல் தெரிந்து கொண்ட சிறுவனின் பெற்றோர், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு வந்து சிறுவனை மீட்டுச் சென்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP