3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு!

கோவை கரட்டு மேடு பகுதியில் 3 வயது பெண் குழந்தை உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொலையா? விபத்தா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு!

கோவை கரட்டுமேடு பகுதியில் 3 வயது பெண் குழந்தை உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது. 

கோவை மாவட்டம், காரமடை பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவரது 3 வயது பெண் குழந்தை கரட்டுமேடு முருகன் கோவில் அருகே உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், குழந்தை விபத்தில் உயிரிழந்ததா? அல்லது யாரேனும் கொலை செய்தார்களா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP