கோவை அரசு மருத்துவமனையில் டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் 36 பேர் அனுமதி

டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் சத்திய மங்கலத்தைச் சேர்ந்த 36 பேர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

கோவை அரசு மருத்துவமனையில் டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் 36 பேர் அனுமதி

டிப்திரியா வைரஸ் அறிகுறியுடன் சத்திய  மங்கலத்தைச் சேர்ந்த 36 பேர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள மலை கிராமத்தை சேர்ந்த 11 பள்ளி மாணவர்கள் டிப்திரியா (தொண்டை அடைப்பான்) வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சத்தியமங்கலம் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இந்நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதனை தடுக்க தமிழக அரசு தற்போது அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தொண்டை அடைப்பான் நோய் பரவாமல்  தடுக்க அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மற்றும் ஈரோட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு  பள்ளி மாணவ-மாணவியருக்கு டிப்திரியா டெட்டணஸ் தடுப்பு ஊசிகள் போடப்பட்டது. இந்நிலையில் இதேநோய் அறிகுறியுடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த 39 பேர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 பள்ளி மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் இந்த வைரஸ் தடுப்பூசி போட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் தொண்டை அடைப்பான் நோய் குறித்த  போதிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP