3 நம்பர் லாட்டரி விற்பனை செய்தவர்கள் கைது

3 நம்பர் லாட்டரி விற்பனை செய்தவர்கள் கைது
 | 

3 நம்பர் லாட்டரி விற்பனை செய்தவர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் பிடியில் சிக்கினர். 

அரசால் தடை செய்யப்பட்ட 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கியதால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக விழுப்புரத்தை சேர்ந்த அருண் என்பவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனொரு கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வடசேரி பகுதியில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், விக்னேஷ் பாண்டியன் மற்றும் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP