ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் உதவியுடன் பணம் திருட்டு: 3 பேர் கைது

சென்னை அயனாவரம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருட முயன்ற 3 பேரை மத்திய குற்றப்பரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
 | 

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் உதவியுடன் பணம் திருட்டு: 3 பேர் கைது

சென்னை அயனாவரம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் திருட முயன்ற 3 பேரை  மத்திய குற்றப்பரிவு போலீசார் கைது  செய்துள்ளனர். 

சென்னை அயனாவரத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் பயனாளர்களின் தகவல்களை திருடி பணம் கொள்ளையடிக்க பயன்படுத்தப்படும் ஸ்கிம்மர் கேமரா பொருத்தப்பட்டிருப்பது கடந்த 17ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வங்கி வாடிக்கையாளர் அளித்த தகவலின் பேரில் அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதை தொடர்ந்து வங்கி மோசடி என்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தகவல்களை திருடிய கொள்ளையர்கள் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் பணம் திருடியுள்ளனர். இதை வைத்து கொள்ளையர்களை பின்தொடர்ந்து போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன், பணம் திருட முயன்ற இர்பான், அல்லா பகாஸ், அப்துல் ஹாதி ஆகியோரை இன்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP