நூதனமாக கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்!

திருச்சி விமானநிலையத்தில் சுமார் 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
 | 

நூதனமாக கடத்தி வந்த 2 கிலோ தங்கம் பறிமுதல்!

திருச்சி விமானநிலையத்தில் சுமார் 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானம் மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை  செய்தனர். 

அப்போது, சென்னையைச் சேர்ந்த சதாம் உசேன் (36) மற்றும் முஷ்டாக் அலி (38),  திருச்சியைச் சேர்ந்த அசாருதீன் (40) ஹிக்மத்துல்லா (39) ஆகிய நான்கு பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களை அழைத்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது,  சதாம் உசேன் முஷ்டாக் அலி, அசாருதீன் ஆகியோர் 1418 கிராம் தங்கத்தை பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்ததது தெரியவந்தது, இதைதொடர்ந்து அவர்களை 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதேபோல், ஹிப்மதுல்லா என்பவர் காலணிகளில் மறைத்து எடுத்து வந்த 522.5 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வாறு நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில்  66 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1940 கிராம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP