டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் கொள்ளை!

மணப்பாறை அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ. 2.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ.2 லட்சம் கொள்ளை!

மணப்பாறை அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ. 2.10 லட்சம்  கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பபட்டி அருகே உள்ள ஊனையூரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஆகிய இருவரும் கடையை முடித்து விட்டு விற்பனை பணம் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்துள்ளனர். 

அப்போது, கடைக்குள் புகுந்த 3 பேர் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் பணியாளர்கள் இதுதொடர்பாக வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வுகள் மேற்கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைகாட்டி அருகே வெள்ளையக்கோன்பட்டியில் டாஸ்மாக் கடை பணி நேரம் முடிவடிந்ததும் ஊழியர்க் அன்றை வசூல் தொகையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பிய போது மர்ம நபர்கள் டாஸ்மாக் பணியாளர்களை தாக்கி பணத்தை தட்டிப் பறித்துச் சென்றனர். இதுவரை அந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்படாத நிலையில் தற்போது மீண்டும் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP