கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலகம் இடிந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
 | 

கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலகம் இடிந்து விபத்து: 2 பேர் உயிரிழப்பு!

கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை ரயில் நிலையத்தின்  பின்புறம்  கூட்ஸ் ரோட்டில்  ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இங்கு இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பார்சலாக வந்த பொருட்களை வைக்கும் இடமாக செயல்பட்டு வந்தது.  இந்நிலையில் இன்று காலை 3.30 மணியளவில் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய ஒப்பந்த பணியாளர்கள் பவிழம்மணி, இப்ராஹிம் மற்றும் வடமாநில தொழிலாளி ராஜூ ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இப்ராஹிம் மற்றும் பவிழம் மணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  வடமாநில தொழிலாளி ராஜூ தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP