195 கற்பழிப்பு! 116 கொலைகள்! ரெளடிகளின் கூடாரமாகும் தமிழக மாவட்டம்!!

கோவை சரகத்தில் ஒரே ஆண்டில் 195 பாலியல் வழக்குகள், 116 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

195 கற்பழிப்பு! 116 கொலைகள்! ரெளடிகளின் கூடாரமாகும் தமிழக மாவட்டம்!!

கோவை சரகத்தில் ஒரே ஆண்டில் 195 பாலியல் வழக்குகள், 116 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு காவல்துறையின் மேற்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கியே கோவை சரகம் இயங்கி வருகிறது. இந்த 4 மாவட்டங்களில் நிகழ்ந்த விபத்துக்கள் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை ஒன்றை கோவை சரக காவல்துறை வெளியிட்டுள்ளது.

அதில், ஓர் ஆண்டில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 195 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு வழக்கில் தூக்குத் தண்டனையும், 5 வழக்குகளில் ஆயுள் தண்டணையும், 12 வழக்குகளில் 7 ஆண்டுகள் சிறை தண்டணையும் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 14 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை சரகத்தில் மட்டும் 60,499 பேர் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதோடு, இவ்வாண்டில் கோவை சரகத்தில் பதிவு செய்யப்பட்ட 116 கொலை வழக்குகளில் 113 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கையில் உள்ளதாகவும், 23 கொலை வழக்குகளில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டணையும் 1 வழக்கில் தூக்குத் தண்டணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP