10 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த 18 பேர் மீட்பு!

காஞ்சிபுரம் பழந்தண்டலத்தில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 18 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
 | 

10 ஆண்டுகள் கொத்தடிமைகளாக இருந்த 18 பேர் மீட்பு!

காஞ்சிபுரம் பழந்தண்டலத்தில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 18 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த குன்றத்தூர், பழந்தண்டலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மரம் வெட்டும் தொழிலில் ரூ.10 ஆயிரத்திற்கு கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என 18 பேரை அதிகாரிகள் மீட்டனர். மேலும், கொத்தடிமைகளாக பணியமர்த்தி வேலை வாங்கிய மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP