திருச்சி விமான நிலையத்தில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்

புதுக்கோட்டையை சேர்ந்த சையது இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல்கான், சென்னையைச் சேர்ந்த ஃபயஸ் ரஹ்மான் ஆகியோர் எடுத்துவந்த ரூபாய் 56.50 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

திருச்சி விமான நிலையத்தில் 1.6 கிலோ தங்கம்  பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த சையது இப்ராஹிம், ராமநாதபுரத்தை சேர்ந்த அஜ்மல்கான், சென்னையைச் சேர்ந்த ஃபயஸ் ரஹ்மான் ஆகியோர் எடுத்து வந்த ரூபாய் 56.50 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP