ரூ.15,000 கடனுக்காக சிறுமி சீரழிப்பு.. பெற்றோர் உள்பட 5 பேர் கைது

ரூ.15,000 கடனுக்காக சிறுமி சீரழிப்பு.. பெற்றோர் உள்பட 5 பேர் கைது
 | 

ரூ.15,000 கடனுக்காக சிறுமி சீரழிப்பு.. பெற்றோர் உள்பட 5 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கவுண்டனூரைச் சேர்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரிடம், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி இருந்தனர்.

கூலி தொழிலாளியான அத்தம்பதியர் தாங்கள் கடனாகப் பெற்ற ரூ.15,000 பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால், கடன் கொடுத்த மூக்கனும் அவரின் மனைவி அஞ்சலமும் தாங்கள் கொடுத்த கடனுக்கு அடமானமாக, கடன் வாங்கிய தம்பதியின் 13 வயது மகளை மகன் சரவணகுமாருக்குத் திருமணம் செய்துவைக்க வற்புறுத்தியுள்ளனர்.

ரூ.15,000 கடனுக்காக சிறுமி சீரழிப்பு.. பெற்றோர் உள்பட 5 பேர் கைது

ஆனால் சிறுமி மறுக்கவே, பெற்றோர் சம்மதத்துடன் சிறுமியை சரவணகுமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து சரவணகுமாருக்கு 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைத்தனர். இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்குத் தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது உண்மைதான் என்பதைக் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ், சரவணகுமாரையும், குழந்தை திருமண தடுப்புச் சட்டப்பிரிவின்கீழ் சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் 5 பேரும் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP