கோவையில் 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கார் மூலம் கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
 | 

கோவையில் 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

கோவையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரிங்க்ஸ்  நிறுவனத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் இயங்கி வருகின்றன.  இந்நிலையில், கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள அந்நிறுவனத்தின் கிளையிலிருந்து வந்த வாகனத்தை புளியகுளம் பகுதியில் சோதனை மேற்கொண்டு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 149 கிலோ எடையிலான தங்க கட்டியை அந்த வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணத்தை சமர்ப்பிக்காததால், தங்க கட்டிகளுடன் வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

கோவையில் 149 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

இதனிடையே தங்கநகை உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட நகையை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் 25க்கும் மேற்பட்ட தங்கநகை உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP