கோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 13 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 | 

கோவிலில் மொட்டையடிக்க கூடுதல் பணம் வசூல்: 13 பேர் சஸ்பெண்ட்

திருச்சி  மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 13 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து காணிக்கை செலுத்துவார்கள். முடி காணிக்கை செலுத்த 30 ரூபாய் கோவில் நிர்வாகம் சார்பில் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், முடி திருத்தும் நபர்கள் மொட்டையடிக்க வரும் பக்தர்களிடம் நபர் ஒன்றுக்கு ரூ.50 கூடுதல் கட்டணம் வசூல் செய்து வந்தனர்.  

இது தொடர்பாக முடிதிருத்தும் நபர்களிடம் விசாரித்த போது, மொட்டையடிக்கும் பக்தர்களிடம் இருந்து 50 ரூபாய் பெற்றுகொண்டு தங்களுக்கு 25 ரூபாய் வழங்கும் படி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுவதாகவும், அதன் காரணமாகவே கட்டாயப்படுத்தி ரூ.50 வசூல் செய்வதாகவும் தகவல்கள் கசிந்தது. 

இதையடுத்து கடந்த 2 நாட்களாக இந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியானதோடு, தொலைக்காட்சி செய்திகளிலும் ஒளிப்பரப்பானது. இந்நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொண்ட கோவில் இணை ஆணையர் அசோக்குமார், இவ்விவகாரம் தொடர்பாக 13 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP