சினிமா பாணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி ரூ.13 லட்சம் கொள்ளை!

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் என கூறி கேரள வியாபாரியிடம் ரூ.13 லட்சம் கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 | 

சினிமா பாணியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி ரூ.13 லட்சம் கொள்ளை!

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் என கூறி கேரள வியாபாரியிடம் ரூ.13 லட்சம் கொள்ளையடித்து சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கேரள மாநிலம் தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத். அவரது நண்பரான விக்னேஷ் என்பவர் கிராமுக்கு 200 ரூபாய் வீதம் குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி இன்று அதிகாலை கோவைக்கு அழைத்து வந்துள்ளார். கோவையைச் சேர்ந்த சிவா என்ற நபர் மூலம் தங்கத்தை வாங்க திட்டமிட்டிருந்ததால், சிவாவை காண்பதற்காக உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் சிவானந்தா காலனி பகுதிக்கு வந்துள்ளனர். 

சிவானந்தா காலனி பகுதியில் காத்திருந்த சிவா அங்கு நின்றிருந்த இன்னோவா கார் ஒன்றை காண்பித்து அதில் வியாபாரிகள் இருப்பதாக கூறவே நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் இருவரும் அந்த காரில் ஏறியுள்ளனர். அப்போது காரில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் எனவும் கையில் கொண்டுவந்திருந்த பணத்தை தருமாறும் கேட்டுள்ளனர். அதில் ஒருவர் காவல்துறையினரின் சீருடையில் இருந்ததால் அதனை நம்பிய நவ்ஷாத் தனது கையிலிருந்த பணப்பையை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் நவ்சாத் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் வழியில் இறக்கி விட்டு தப்பியோடியுள்ளனர். அதேவேளையில் இன்னோவா காரில் இருந்தவர்களை அறிமுகப்படுத்திய சிவா என்பவரும் தலைமறைவானதால் அதிர்ச்சியடைந்த நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் உடனடியாக தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் இரத்தினபுரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பல் மற்றும் சம்பவத்திற்கு காரணமாக இருந்த சிவா ஆகியோரை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP