100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்!

100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையெழுத்து இயக்கம் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார்.
 | 

தமிழகம், புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக சேலம் கோட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 100% வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி கலந்துகொண்டு தனது கையெழுத்திட்டு  தொடங்கி வைத்தார்.

மேலும் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அனைத்து ஏடிஎம் மையங்களிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதாக உறுதிமொழி ஏற்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP