ஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்

ஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்
 | 

ஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்

டிக்டாக்கில் ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டதால் மனைவியை கத்தியால் பலமுறை குத்தி கணவனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சகோதரிகளான மனிஷாவும், மஞ்சுவும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இதில் மஞ்சு, சயீப் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் செவிலியராக உள்ள தனது சகோதரிக்கு உதவியாக மஞ்சு வசித்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததால் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் தப்பியோடியதை கண்ட அப்பகுதியினர் உள்ளே சென்று பார்த்தப்போது சகோதரிகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து சடலமாக கிடந்தனர்.

ஆண் நண்பருடன் டிக்டாக்.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்

இது தொடர்பான தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு இரண்டு இளைஞர்கள் வந்து செல்வது உறுதியானது. மேலும் அது மஞ்சுவை திருமணம் செய்த சயீப் மற்றும் குலாம் முஸ்தபா என்பதும் தெரியவந்தது.
சயீப் மற்றும் மஞ்சு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் மஞ்சு ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நடித்த டிக்டாக் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மஞ்சு. இதை பார்த்த சயீப் ஆத்திரத்தில் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக முஸ்தாபா எனும் நண்பருடன் மஞ்சு தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மஞ்சுவின் சகோதரியும் இருந்ததால் இருவரும் கொலை செய்யப்பட்டனர். சகோதரிகள் கொலை தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் சயீப்பையும், முஸ்தாபாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP