விபத்தில் சிக்கிய தனுஷ் பட நடிகை! படப்பிடிப்பு ரத்து!!

விபத்தில் சிக்கிய தனுஷ் பட நடிகை! படப்பிடிப்பு ரத்து!!
 | 

விபத்தில் சிக்கிய தனுஷ் பட நடிகை! படப்பிடிப்பு ரத்து!!

அசுரன் படத்தில் தனுசுடன் சேர்ந்து நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் தற்போது, சதுர்முகம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். திகில் படமாக தயாராகி வரும் இந்த படத்தில்  மஞ்சுவாரியர் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைப்பெற்று வரும் நிலையில், நடிகை மஞ்சுவாரியர் வில்லன்களுடன் மோதும் காட்சிகளை படமாக்கும் போது, நடிகை மஞ்சு வாரியர் மேலே இருந்து விழுந்தார். இந்த சண்டைக் காட்சியில் அவருக்குப் பதிலாக டூப் நடிகையைப் பயன்படுத்தலாம் என்று சண்டைக் காட்சி இயக்குநரும், படத்தின் இயக்குநரும் வற்புறுத்தியும், கேட்காமல் தானே செய்வதாகக் கூறி, பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றையும் மீறி சண்டைக் காட்சியில் கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. வலியால் துடித்த நடிகை  மஞ்சு வாரியருக்கு உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால், படப்பிடிப்பு அத்துடன் நிறுத்தப்பட்டு, முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மஞ்சுவாரியருக்கு அதிக உயரத்தில் இருந்து குதித்ததினால், இடுப்புப் பகுதியிலும், காலிலும் அதிகளவில் காயங்கள் ஏற்பட்டன. 

இம்மாதம் 12ம் தேதி மஞ்சுவாரியர் நடன நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த திடீர் விபத்தினால், அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கு, டாக்டர்கள் எனது காலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து உள்ளதால் என்னால் அன்றைய தினம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP