சிவராத்திரியில் பக்தர்கள் பரவசம்.. வழிப்பறி கொள்ளையர்கள் குஷி!!

சிவராத்திரியில் பக்தர்கள் பரவசம்.. வழிப்பறி கொள்ளையர்கள் குஷி!!
 | 

சிவராத்திரியில் பக்தர்கள் பரவசம்.. வழிப்பறி கொள்ளையர்கள் குஷி!!

சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் பக்தியுடன் பங்கேற்றனர். பெருமளவில் கூட்டம் திரண்டதால் அதனை பயன்படுத்தி ஒருசில இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அப்போது, கூட்டத்தை பயன்படுத்தி சைதாப்பேட்டையை சேர்ந்த சரஸ்வதி (65), சாந்தி (65) ஆகிய இருவரிடமும் 8 சவரன் செயினையும், பல்லாவரத்தை சேர்ந்த அபிராமி (25) என்பவரிடம் 8 சவரன் செயினையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

சிவராத்திரியில் பக்தர்கள் பரவசம்.. வழிப்பறி கொள்ளையர்கள் குஷி!!

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதேபோல் பல இடங்களில் கூட்டத்தை பயன்படுத்தி பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. காவல்நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP