பிறந்தநாள் கொண்டாட கேக் வர தாமதம்.. காரணம் கேட்டவரை அடித்துக்கொன்ற கடைக்காரர்கள்..

பிறந்தநாள் கொண்டாட கேக் வர தாமதம்.. காரணம் கேட்டவரை அடித்துக்கொன்ற கடைகாரர்கள்..
 | 

பிறந்தநாள் கொண்டாட கேக் வர தாமதம்.. காரணம் கேட்டவரை அடித்துக்கொன்ற கடைக்காரர்கள்..

சென்னையில் பூந்தோப்பு காலனியை சேர்ந்த புஷ்பராஜன் பேக்கரி கடைக்காரர்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். ஆர்டர் செய்த கேக் வர தாமதமானதால் இந்த கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பு கூறுகையில், டிசம்பர் 31ஆம் தேதி இரவு பூந்தோப்பு காலனியை சேர்ந்த குமார் மற்றும் புஷ்பராஜன் குமாரின் பிறந்தநாளை கொண்டாட அங்கு உள்ள ஒரு பேக்கரி யில் கேக் ஆர்டர் செய்திருந்தனர் .

பிறந்தநாள் கொண்டாட கேக் வர தாமதம்.. காரணம் கேட்டவரை அடித்துக்கொன்ற கடைக்காரர்கள்..

ஆனால் மாலை கேக் வர தாமதமானதால் அவர்கள் பேக்கரி கடைக்கு சென்று அங்கிருந்த கடை உரிமையாளர், ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . அதற்கு பிறகு இருவரும் வீட்டுக்கு வரும் வழியில் 10பேர் கொண்ட பேக்கரி காரர்களின் கும்பல் அவர்களை வழியில் மடக்கி கடுமையாக தாக்கியுள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட கேக் வர தாமதம்.. காரணம் கேட்டவரை அடித்துக்கொன்ற கடைக்காரர்கள்..இதில் புஷ்பராஜன் கடுமையான காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டும் அவை பலனளிக்காமல் சனிக்கிழமை உயிரிழந்தார். இதனால் காட்டூர் போலீசார் பரத் , உமா பரத், பிரதாப், அஜித், ஸ்டாலின் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP