உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க  வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து  ஓ.பன்னீர் செல்வம் தற்காலிக முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக்கோரியும் ஜெய் சுக்கின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஏன் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை எனவும், தேர்தல் நடத்துவது தொடர்பான இறுதி பணிகளை எப்போது செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 

மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி மறுவரை செய்யும் பணி  நடைபெற்றதால் தேர்தல் நடத்துவதில் தாமதம்  ஏற்பட்டதாக  தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP