இவர்களெல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது?

இந்து மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு மதம் மாறியவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
 | 

இவர்களெல்லாம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாது?

இந்து மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு மதம் மாறியவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கில் நீதிமன்றம் இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்தியா முழுவதும் எஸ்.சி., எஸ்.டி சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடவேண்டும் என்பது விதி. மதம் மாறியவர்கள் இந்த தொகுதிகளில் போட்டியிட முடியாது. ஆனால், பெரும்பாலும் பலர் இந்து மதத்தில் இருந்து வேற்று மதத்திற்கு மாற்றிவிட்டு போலியாக இந்து சாதி சான்றிதழைக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவதாக குற்றசாட்டுகள் எழுந்தது.

இதனை கருத்தில் கொண்டு தனியார் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் முறையாக ஆவணங்கள் இன்றி, உள்ளாட்சி தேர்தலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வார்டுகளில் மாற்று மதத்திற்கு மதமாறியவர்கள் போட்டியிட கூடாது என்றும், அவர்கள் போட்டியிடுவதற்கு தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்துவிட்ட சூழலில் தலையிட முடியாது என்று கூறியது. ஆனால் வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்யவில்லை. இதனால் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரிய தீர்ப்பு ஒன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சாதி சான்றிதழ்கள் குறித்து முறையாக விசாரணை செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் யாராவது வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் போலியாக இந்து மதத்தில் ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்டால் மாவட்ட ஆட்சி தலைவர்களிடம் முறையிட்டு அவர்களை தகுதி நீக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP