செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனை பறிமுதல் செய்தால் என்ன? நீதிபதிகள்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கில், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
 | 

செல்போன் பேசி கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனை பறிமுதல் செய்தால் என்ன? நீதிபதிகள்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான வழக்கில், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் கனரக வாகன ஓட்டுனர்கள் சாலை விதியை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். அப்போது பிற வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகின்றன. ஓட்டுனர்களும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.

சாலை விதி மீறலை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பல்வேறு வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளன. இருப்பினும் காவல்துறையினரும், வட்டார போக்குவரத்து அலுவலர்களும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான அபராதத்தை 10 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்த வேண்டும்,

செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவோரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் தொடர்பாக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும், மூன்றாவது முறையாக விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். இது தொடர்பான 1988-ம் ஆண்டு மோட்டார் வாகன விதிகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்"என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக புகார் அளிக்கவென நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட 9498141457 எண் எப்போதும் ஆப் செய்தே வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   

அதற்கு நீதிபதிகள் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார் அளிப்பதற்கான எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது ஏன்? எனவும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களின் செல்போனை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார் அளிப்பதற்கான எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது குறித்து டிஜிபியிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள்  வழக்கை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP