தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

அமமுகவிற்கு பொது சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக வேறு சின்னத்தை ஒதுக்கி தருகிறோம் என்றும் கூறியுள்ளது.
 | 

தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்!

அமமுகவிற்கு பொது சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக வேறு சின்னத்தை ஒதுக்கி தருகிறோம் என்றும் கூறியுள்ளது.

குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. அப்போது, அமமுகவிற்கு பொது சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்றும், பதிவு பெற்ற கட்சிகளுக்கு மட்டும்தான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும் என்றும், நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக வேறு சின்னத்தை ஒதுக்கி தருகிறோம் என்றும் கூறியுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP